காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் – ராணுவ அதிகாரி பேட்டி

13685 0

ஜம்மு காஷ்மீரில் சுமார் 300 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் 250 பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே பதுங்கியுள்ளனர் என ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்துக்கு ராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரல் ஏ.கே.பட் சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 300 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் 250 பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவுவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே பதுங்கியுள்ளனர்.
பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்த ராணுவம் விழிப்புடன் இருக்கிறது. ராணுவத்தினரின் முயற்சிகளுக்கு எல்லைப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். காஷ்மீரில் முற்றிலுமாக பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த விரும்புகிறோம்.
ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீசாருடன் இணைந்து பகுதிவாரியாக பயிற்சி ஒத்திகை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Leave a comment